Saturday, October 11, 2014

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் திருநெல்வேலி அகில இந்திய வானொலி சார்பில் தீபாவளிப் பட்டிமன்றம்





 பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் 11.10.14 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

திருநெல்வேலி அகில இந்திய வானொலியும் சீதக்காதி தமிழ்ப்பேரவை மற்றும் மாணவர் பேரவையும் இணைந்து நடத்திய தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் “பண்டிகைகளால் கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற பொருளில் அமைந்தது. 

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.
 

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமைவகித்துத் தலைமையுரை ஆற்றினார்.

 
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.விழாவில் சிறப்புவிருந்தினராக திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் திரு.பி.பிரபாகரன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

நடுவராக பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்று கொண்டாட்டமே! என்று தீர்ப்புத் தந்தார்.நெல்லை வானொலியின் அறிவிப்பாளர் திருமதி.உமாகனகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
 
மாணவர் பேரவைச் செயலாளர் சகினா பானு,பேரவைத் துணைத்தலைவர் ரிஸ்வானா,இணைச் செயலாளர் அமீர் ரஷீத் கான்,எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இலட்சுமணப் பெருமாள்,ராமபூதத்தான்,கவிதாஜவகர்,இந்திராஜெயசந்திரன் ஆகியோர் அணிகளின் சார்பில் வாதிட்டனர்.

 மாணவர் பேரவைத் தலைவர் முகமது அப்சர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை வானொலியும் சீதக்காதி தமிழ்ப்பேரவையும் செய்திருந்தன.


நிகழ்ச்சி தீபாவளித் திருநாளன்று காலை பத்துமணிக்கு திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பாகும்.

Thursday, August 21, 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கவிழா



அன்புடன் வரவேற்கிறோம்

நம் கல்லூரியில் 1976 ஆம் ஆண்டு புகுமுக வகுப்புப் பயின்ற முன்னாள் மாணவர் திரு.முத்துக்கருப்பன் அவர்கள்,நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினாராய் பொறுப்பேற்றுள்ளார்கள்.அவர்கள் 23.8.14 அன்று காலை 11 மணியளவில் நம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெறவுள்ள மாணவர் பேரவைத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு பேரவையைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

Saturday, July 19, 2014

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பகடிவதைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்



பகடிவதை எதிர்ப்புக் கருத்தரங்கம்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பகடிவதைக்கு எதிரான விழிப்புணர்வுக் குழுவின் சார்பில் 17.7.14 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் திருநெல்வேலி மாநகரக் காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.ஸ்டான்லி ஜோன்ஸ் சிறப்புரையாற்றுகிறார்.

அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக்,தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன், பகடிவதைக்கு எதிரான விழிப்புணர்வுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முகம்மது சதக்,வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முகம்மதுநாசர் ஆகியோர் உள்ளனர்.


Thursday, April 10, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாம்




 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து இளம் புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாமினை 8.4.2014 அன்று காலை 9.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடத்தியது.

 துரைகுமார், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் தலைவர், துரைகுமார் வரவேற்றுப் பேசினார்.

 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார்.

 திருநெல்வேலி மாநகராட்சி உதவிஆணையர் ஏ.பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் பா.சுவர்ணகோமதி நாயகம் ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு குறித்துச் சிறப்புரையாற்றினர்.


வருவாய் உதவியாளர் குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் க.சீனிவாசன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துத் தலைமையுரை ஆற்றுகையில்
 

 “பதினாறாவது மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை 23 லட்சத்து 15000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.18 வயது நிரம்பிய அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்கலாம்.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து கல்லூரி மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.துல்லியமாக வாக்களிக்க இந்த இயந்திரத்தை பயன்படுத்துகிறோம்.வாக்குப்பதிவு காலை ஏழுமணி முதல் மாலை ஆறு மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.இளம் வாக்காளர்கள் காலை ஏழுமணிக்கு வாக்களிக்கலாம்.இந்த ஆண்டுமுதல் வழக்கமான வாக்காளர்கள் பெயர்களோடு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்யும் நோட்டோ எனும் பொத்தான் பதினாறாவதாக அமைக்கப்பட்டுள்ளது.உங்கள் வாக்குகள் விலை மதிப்பில்லாதது.ஒருபோதும் பணத்திற்காக அதை விற்கமுயலாதீர்கள்.”


என்று தலைமை உரையாற்றினார்.



கல்லூரியின் இளைஞர்நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.


பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.நிகழ்வின் தொடர்ச்சியாக அனைத்து மாணவ மாணவியருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து செய்திருந்தன.








படத்தில்: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து இளம் புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாமினைத் தொடங்கிவைத்து திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் க.சீனிவாசன் தலைமையுரை ஆற்றுகிறார்.
அருகில் முனைவர் ச.மகாதேவன், திருநெல்வேலி மாநகராட்சி உதவிஆணையர் ஏ.பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் பா.சுவர்ணகோமதி நாயகம், கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக், துரைகுமார், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் தலைவர், துரைகுமார் ஆகியோர் உள்ளனர்.
செய்தி:முனைவர் ச.மகாதேவன்