Saturday, October 11, 2014

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் திருநெல்வேலி அகில இந்திய வானொலி சார்பில் தீபாவளிப் பட்டிமன்றம்





 பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் 11.10.14 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

திருநெல்வேலி அகில இந்திய வானொலியும் சீதக்காதி தமிழ்ப்பேரவை மற்றும் மாணவர் பேரவையும் இணைந்து நடத்திய தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் “பண்டிகைகளால் கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற பொருளில் அமைந்தது. 

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.
 

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமைவகித்துத் தலைமையுரை ஆற்றினார்.

 
கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.விழாவில் சிறப்புவிருந்தினராக திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் திரு.பி.பிரபாகரன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

நடுவராக பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் பங்கேற்று கொண்டாட்டமே! என்று தீர்ப்புத் தந்தார்.நெல்லை வானொலியின் அறிவிப்பாளர் திருமதி.உமாகனகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
 
மாணவர் பேரவைச் செயலாளர் சகினா பானு,பேரவைத் துணைத்தலைவர் ரிஸ்வானா,இணைச் செயலாளர் அமீர் ரஷீத் கான்,எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இலட்சுமணப் பெருமாள்,ராமபூதத்தான்,கவிதாஜவகர்,இந்திராஜெயசந்திரன் ஆகியோர் அணிகளின் சார்பில் வாதிட்டனர்.

 மாணவர் பேரவைத் தலைவர் முகமது அப்சர் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை வானொலியும் சீதக்காதி தமிழ்ப்பேரவையும் செய்திருந்தன.


நிகழ்ச்சி தீபாவளித் திருநாளன்று காலை பத்துமணிக்கு திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பாகும்.