Thursday, April 10, 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இளம் வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாம்




 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து இளம் புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாமினை 8.4.2014 அன்று காலை 9.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடத்தியது.

 துரைகுமார், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் தலைவர், துரைகுமார் வரவேற்றுப் பேசினார்.

 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார்.

 திருநெல்வேலி மாநகராட்சி உதவிஆணையர் ஏ.பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் பா.சுவர்ணகோமதி நாயகம் ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு குறித்துச் சிறப்புரையாற்றினர்.


வருவாய் உதவியாளர் குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் க.சீனிவாசன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துத் தலைமையுரை ஆற்றுகையில்
 

 “பதினாறாவது மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை 23 லட்சத்து 15000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.18 வயது நிரம்பிய அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்கலாம்.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து கல்லூரி மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.துல்லியமாக வாக்களிக்க இந்த இயந்திரத்தை பயன்படுத்துகிறோம்.வாக்குப்பதிவு காலை ஏழுமணி முதல் மாலை ஆறு மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.இளம் வாக்காளர்கள் காலை ஏழுமணிக்கு வாக்களிக்கலாம்.இந்த ஆண்டுமுதல் வழக்கமான வாக்காளர்கள் பெயர்களோடு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்யும் நோட்டோ எனும் பொத்தான் பதினாறாவதாக அமைக்கப்பட்டுள்ளது.உங்கள் வாக்குகள் விலை மதிப்பில்லாதது.ஒருபோதும் பணத்திற்காக அதை விற்கமுயலாதீர்கள்.”


என்று தலைமை உரையாற்றினார்.



கல்லூரியின் இளைஞர்நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.


பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.நிகழ்வின் தொடர்ச்சியாக அனைத்து மாணவ மாணவியருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து செய்திருந்தன.








படத்தில்: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து இளம் புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாமினைத் தொடங்கிவைத்து திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் க.சீனிவாசன் தலைமையுரை ஆற்றுகிறார்.
அருகில் முனைவர் ச.மகாதேவன், திருநெல்வேலி மாநகராட்சி உதவிஆணையர் ஏ.பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் பா.சுவர்ணகோமதி நாயகம், கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக், துரைகுமார், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் தலைவர், துரைகுமார் ஆகியோர் உள்ளனர்.
செய்தி:முனைவர் ச.மகாதேவன்





பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுரியில் நீரிழிவு நோயாளிகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்தும் முகாம்








பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம்நீரழிவு நோயாளிகளுக்கு இலவசமருந்து உதவி

 வெளிநாடு வாழ் இந்தியப் பெண்மணி தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நீரிழிவு நோயாளிகளுக்கான இலவச ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்தும் தன்னார்வத் தொண்டு அமைப்பை திருநெல்வேயில் தொடங்குகிறார். இதன் தொடக்க விழா சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம் எனும் எஸ்.ஓ.பி அமைப்போடு இணைந்து வரும் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நெல்லையில் நடத்தப்படுகிறது.

                  நெல்லையைப் பூர்வீகமாக கொண்ட பீமா ஜான் என்கிற பெண்மணி தற்பொழுது ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரும் இளம் வயதிலேயே நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுத் துன்பத்திற்குள்ளானவர்.பின் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து இன்று ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே இந்தியாவின் சில பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவிலும் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.உலக அளவில் முன்னூறுபேர் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.
       தன் சொந்த ஊரான நெல்லையில் இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் இளம் நீரிழிவு நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களை ஒன்றிணைத்துத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அவர்களையும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வரும் வகையில் ஆற்றுப்படுத்துதல் செய்வதும் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் நோயாளிகளுக்குத் தன்னார்வ நண்பர்களின் உதவியோடு தேவையான மருந்துப்பொருட்கள் தந்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவவும் எண்ணியுள்ளார். இதன் தொடக்க விழா சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம் எனும் எஸ்.ஓ.பி அமைப்போடு இணைந்து வரும் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நெல்லையில் நடத்தப்படுகிறது.கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக் தலைமையில் கல்லூரி உரையரங்கில் நடைபெற உள்ளது.கோவில்பட்டியைச் சார்ந்த சர்க்கரைநோய் நிபுணர் டாக்டர் மரியசெல்வம்,திருநெல்வேலி மருத்துவர் டாக்டர் அபுபக்கர்,பிரபல தமிழ்ப் பேராசிரியர் சரஸ்வதிராமநாதன் ஆகியோர்பங்கேற்று நீரழிவு நோயிலிருந்து எப்படி மீள்வது?என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்.சட்டக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்துகிறார்கள்.திருநெல்வேலியைச் சார்ந்த சமூக ஆர்வலர் வெங்கட்ராமன் எழுதி இசையமைத்துள்ள நீரழிவு விழிப்புணர்வுப் பாடல் விழாவில் வெளியிடப்படுகிறது.நேயர்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பதில் அளிக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம்நீரழிவு நோயாளிகளுக்கு இலவசமருந்து உதவிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கட்டணம் ஏதும்செலுத்தத் தேவையில்லை.விழாவைத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன்,பேராசிரியர் சேக் தம்பி ஆகியோர்.ஒருங்கிணைத்து நடத்துகிறார்.முகாமில் பங்கேற்க விரும்புவோர் திரு.வெங்கட்ராமன் அவர்களை செல்பேசிமூலம் தொடர்பு கொள்ளலாம்(9944452403)
cell number:9944452403



      

Saturday, April 5, 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் “ஆறாம் விரல்” கவிதை நூல் வெளியீட்டு விழா



மாணவர்களின் கவித்திறமையை வெளியே கொண்டுவரும் பொருட்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 5.4.2014 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் சங்கமம்-2014 இளைஞர் கலைவிழாவை  மாணவர் பேரவையும் இளைஞர் நலத்துறையும் இணைந்து நடத்தின.

மாணவர் பேரவைத் தலைவர் அப்துல் முனாப் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி,மதிதா இந்துக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.சின்னத்தம்பி கலந்துகொண்டு


ஆறாம் விரல்

ஆறாம் விரல்எனும் தலைப்பில் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து உருவாக்கியுள்ள கவிதைத்தொகுப்பை வெளியிட முதல் பிரதியைக் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் கே.ஏ.மீரான் முகைதீன் அவர்கள் முதல்பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.


மாணவர் பேரவைத் தேர்தல் அதிகாரி பேராசிரியர் ரபி அகமது ,அரசுதவி பெறா வகுப்புகளின் இயக்குனர் முனைவர் நவராஜ் சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.முஹம்மது சாதிக் விழா வாழ்த்துரை வழங்கினார்.இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.மகாதேவன் சங்கமம்-2014 இளைஞர் கலைவிழாவை  ஒருங்கிணைத்து நடத்தினார். 

மாணவர் பேரவைச் செயலாளர் தினிஷா நன்றி கூறினார்.


முனைவர் ச.மகாதேவன்