பன்னாட்டு மதச் சுதந்திரக் கூட்டமைப்பின்
தமிழகக் கிளையின் சார்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் நாட்டுநலப்
பணித்திட்டமும் இணைந்து 6.2.14 அன்று கல்லூரி உரையரங்கில் பல்சமயக்கருத்தரங்கினை
நடத்தின.கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் தலைமையுரை ஆற்றினார். பன்னாட்டு
மதச் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் வழக்கறிஞர் பி.டி.சிதம்பரம் வரவேற்றுப்
பேசினார்.தேசியப் பொருளாளர் முனைவர் பி.அருள்செல்வம் கூட்டமைப்பின் வரலாறு குறித்துப்
பேசினார்.
இந்துசமயம் குறித்து பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்.ச.மகாதேவன் சிறப்புரையாற்றினார்.இஸ்லாம்
குறித்து சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர்
முனைவர் ஏ.அஸ்ரப் அலி சிறப்புரையாற்றினார்.கிறித்தவம் குறித்து டவுன் பங்குத்தந்தை
அருட்தந்தை அந்தோனி குருஸ் சிறப்புரையாற்றினார்.பிற சமயங்கள் குறித்து
என்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.
திருநெல்வேலி முஸ்லீம் அனாதை நிலையத் தாளாளர்
அல்காஜ் எம்.கே.எம் கபீர்,தென்காசியைச் சார்ந்த பி.ஆர்.சுப்ரமணியராஜா,திருநெல்வேலி
லிட்டில் பிளவர் பள்ளியின் தாளாளர் மரியசூசை,நாகர்கோவில் கிளையைச் சார்ந்த முனைவர் கே.சிதம்பர நடராஜன் ஆகியோர் வாழ்த்திப்
பேசினர்.திருநெல்வேலி பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சார்ந்த பிரம்ம குமாரி சீதாதேவி
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.வெங்கடாசலம் நன்றி
கூறினார்.நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் பாதுஷா, பேராசிரியை கண்ணா
முத்தையா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
படத்தில்:பாளை. பன்னாட்டு மதச் சுதந்திரக்
கூட்டமைப்பின் தமிழகக் கிளையின் சார்பில் பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின்
நாட்டுநலப் பணித்திட்டமும் இணைந்து நடத்திய சமயநல்லிணக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற
மாணவர்க்கு சான்றிதழ் வழங்கும் பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சார்ந்த பிரம்ம குமாரி
சீதாதேவி அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் மற்றும் பலர்.
செய்தி:முனைவர் ச.மகாதேவன்,
No comments:
Post a Comment