சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும்
இணைந்து இளம் புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாமினை
8.4.2014 அன்று காலை 9.30 மணிக்குக் கல்லூரி உரையரங்கில் நடத்தியது.
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது சாதிக் வாழ்த்திப் பேசினார்.
திருநெல்வேலி
மாநகராட்சி உதவிஆணையர் ஏ.பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் பா.சுவர்ணகோமதி நாயகம்
ஆகியோர் வாக்காளர் விழிப்புணர்வு குறித்துச் சிறப்புரையாற்றினர்.
வருவாய் உதவியாளர்
குமார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து
மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் க.சீனிவாசன்
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துத் தலைமையுரை ஆற்றுகையில்
“பதினாறாவது மக்களவைத்
தேர்தலில் 81.4 கோடி இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.திருநெல்வேலி
மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை 23 லட்சத்து 15000 வாக்காளர்கள் வாக்களிக்க
உள்ளனர்.வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.18 வயது நிரம்பிய
அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்கலாம்.வாக்களிப்பது ஜனநாயகக் கடமை. மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும்முறை குறித்து கல்லூரி மாணவர்கள்
தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.துல்லியமாக
வாக்களிக்க இந்த இயந்திரத்தை பயன்படுத்துகிறோம்.வாக்குப்பதிவு காலை ஏழுமணி முதல்
மாலை ஆறு மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.இளம் வாக்காளர்கள் காலை ஏழுமணிக்கு
வாக்களிக்கலாம்.இந்த ஆண்டுமுதல் வழக்கமான வாக்காளர்கள் பெயர்களோடு யாருக்கும்
வாக்களிக்க விருப்பமில்லை என்று பதிவு செய்யும் நோட்டோ எனும் பொத்தான் பதினாறாவதாக
அமைக்கப்பட்டுள்ளது.உங்கள் வாக்குகள் விலை மதிப்பில்லாதது.ஒருபோதும் பணத்திற்காக
அதை விற்கமுயலாதீர்கள்.”
என்று தலைமை உரையாற்றினார்.
கல்லூரியின் இளைஞர்நலத்துறை
ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத்
தொகுத்தளித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரி இளைஞர் நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து
செய்திருந்தன.
படத்தில்: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர்
நலத்துறையும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல் அமைப்பும் இணைந்து இளம்
புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு பற்றிய விழிப்புணர்வு முகாமினைத்
தொடங்கிவைத்து திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் க.சீனிவாசன் தலைமையுரை
ஆற்றுகிறார்.
அருகில் முனைவர் ச.மகாதேவன், திருநெல்வேலி மாநகராட்சி உதவிஆணையர்
ஏ.பெருமாள், பாளையங்கோட்டை வட்டாட்சியர் பா.சுவர்ணகோமதி நாயகம், கல்லூரி முதல்வர்
முனைவர் மு.முகம்மது சாதிக், துரைகுமார், ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி
சென்ட்ரல் தலைவர், துரைகுமார் ஆகியோர் உள்ளனர்.
செய்தி:முனைவர் ச.மகாதேவன்
No comments:
Post a Comment