’தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ’’ என்ற பாரதியின் வரிகளில்தான் என்ன தாகம்?
வேருக்கு நீர் வார்த்தவர்களைக் கொஞ்சம்கொஞ்சமாய் மறந்து கொண்டிருக்கும்
வேளையில்தான் அந்தப் பள்ளியில் இருந்து திரு.டி.எஸ்.எம்.ஓ.அசன் அவர்களின் அன்பு
வேண்டுகோள் வந்தது.
மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மௌலானா அபுல்கலாம்
ஆசாத் அவர்களின் சமூக நல்லிணக்கத்தை தலைப்பாகக் கொண்டு சிறப்புரையாற்ற வேண்டும் என
வேண்டினார்.
விடுமுறையில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் எழுதி
அவரது மறைவுக்குப்பின் முப்பது ஆண்டுகள் கழித்து வெளியான ‘’இந்திய விடுதலை
வெற்றி’’ என்ற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன்.
இந்தியா சுதந்திரம் அடையக்கூடிய
நிலையில் நாற்பதுகளில் நடந்த நிகழ்வுகளின் சரித்திர ஆவணம் அந்த நூல் ஒரு வரலாறு
எவ்வாறு பதிவுசெய்யப்பட வேண்டும் என்பதற்கு அந்த நூல் ஓர் சான்று.
ஹிமாயூன் கபீர்
மௌலானாவுடன் உரையாடி எழுத்தாக்கப்பட்டு பலமுறை ஆசாத் அவர்களே வரிக்குவரி வாசித்து
செம்மையாக்கம் செய்த நூல்.
அல்ஹிலால் உருது இதழைத் தொடங்கி சுதந்திர உணர்வை
ஊட்டிய மௌலானா வாழ்நாளின் பெருபகுதியைச் சிறைச்சாலையில் கழித்தார்.
அவர் துணைவியார்
இறந்தபோது கூட ஆங்கிலஅரசு அவரை வெளியே விடவில்லை. ஒரு மணிநேரம்
மிகவிரிவாகப்பேசினேன்
.சில மாணவியர் கண்கலங்கினர்.பேசிமுடித்த பின்னும் மனம்கனமாக
இருந்தது.

No comments:
Post a Comment