கட்டிய பூக்கள்
கடவுளுக்குப் பிடிக்கலாம்,
ஆனால் உதிரிப்பூக்களே
உள்ளபடி எனக்குப் பிடிக்கும்.
நாருமற்று
பூத்தொடுக்க யாருமற்று
உதிர்ந்து கிடக்கும்
இந்த விடுபூக்கள் வியப்புக்குரியன
கட்டுதலையும் உதிர்தலையும் குறித்து
எவ்விதக் கவலையுமின்றி
மணமெனும் மந்திர மொழியில்
மனங்களோடு பேசிக்கொண்டிருக்கின்றன
விடுதலையின் விழிகளால் விடுபூக்கள்.
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி
No comments:
Post a Comment