Friday, October 25, 2013

திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் எழுதிய 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்; நூல் வெளியீட்டுவிழா



பக்காப் படிகள், திருவைகள், உலக்கைகள்,
கிட்டில்கள், குதில்களின் வரிசையில்
அருங்காட்சியகத்தில்
அடுத்து வைக்கப்பட்டிருப்பது
பாட்டி தாத்தாக்களைத் தான்
வேறு முகத்தை எடுத்து நம் உடலில்  மாட்டிக் கொண்டதைப் போல் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கழிந்த பின்னும் நம் தேசத்திற்கென்று தனித்துவம் மிக்க ஒரு கல்வி முறையை உருவாக்கவில்லை என்ற ஆதங்கம் வெகுநாட்களாக என்னுள் உண்டு 

.
            மூடு காலணிகளுடனும், கழுத்துப் பட்டைகளுடனும் முதுகு நிறைய புத்தக மூட்டையுடனும் பள்ளிக்குச் சென்று வருவது மட்டுமா கல்வி?



            நம் இந்தியப் பண்பாடு, வேதங்கள், உபநிடதங்கள், பக்தி இலக்கியங்கள், தேவாரப் பதிகங்கள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், குணங்குடியார், பீரப்பா மெஞ்ஞானப் பாடல்கள், நீதி இலக்கியங்கள் இவற்றை எல்லாம் புறந்தள்ளி உலக மயமாதல் என்ற பெயரிலே இங்கிலாந்துப் பாடத்திட்டத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?  என நினைத்த போது, ஆனந்த விகடனிலே அந்த அறிவிப்பு வந்தது.


                இந்தியக் கல்வி முறையை வேராகக் கொண்டு
 திருமதி. லதாரஜினிகாந்த் சென்னை வேளச் சேரியில் 'தி ஆஷ்ரம்' என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்பதும், அதில் டாஸ்க் என்ற புதிய பாடப் பிரிவைத் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதையும் ஆனந்த விகடனில் திரு. மதன் அவர்கள், திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்திருந்தார்கள்.
                'கல்வி முறையில் மாற்றம் தேவை' என்ற திருமதி. லதா ரஜினிகாந்தின் கட்டுரை ஆனந்த விகடனில் 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்; எனும் தலைப்பில் 36 வாரம் வந்தது. முப்பத்தாறு வாரக் கட்டுரைகளையும் வரிக்குவரி வாசித்தேன், கத்தரித்து  நூலாகக் கட்டமைப்பு செய்து வைத்திருந்தேன் 


.
            ஒவ்வொரு, வாரமும் விகடனில் வரும் தொடரைப் 'பாலம்'
அமைப்பின்
சமூக சேவகர் பாலம் பா. கலியாண சுந்தரம் அவர்களுடன் விவாதித்திருந்தேன்.  'அம்மையாரின் அந்நூல் பற்றிய உன் கருத்தியலை விமர்சனமாக எழுதேன்' என்றார்கள்.  எழுதினேன் 82 பக்க அளவில் என் கட்டுரை நீண்டது...  பாலம் ஐயா மூலம் திருமதி லதா ரஜினி அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன் 

.
பாலம் பா. கலியாணசுந்தரனார் அப்பழுக்கற்ற காந்தியவாதி
'தேவையே பெரிதென்று தேடுவோர் பலரிருக்க
சேவையே உயிரென்று கருதி உருக வந்தார்
பாவை மணமுமின்றி பந்தபாசம் ஏதுமின்றி
நாவை அடக்கி வாழும் நற்சேவை முனிவரிவர்

என்று அவர் வாழ்க்கை வரலாற்றில் நான் எழுதியிருந்தேன்.   பாலம் ஐயா என் விமர்சனக் கட்டுரையைத் திருமதி. லதா ரஜினிகாந்த் அம்மையாரிடம் தந்திருந்தார் 


.
                பிப்ரவரி 2, 1998, நான் பாளை சேவியர் கல்லூரியில் எம்பில் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறேன். திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து கடிதம் வருகிறது 


.
                28.02.1998 ஆம் நாளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும். 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து
கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் திருமதி. லதா ரஜினிகாந்த் என்னை அழைத்திருந்தார்கள் 


.
            என்னால் நம்ப முடியவில்லை! தன் தொடரின் சாதக பாதகங்களை விமர்சித்திருந்த ஒரு சாதாரண மாணவனை அந்நூல் வெளியீட்டு விழாவுக்கே அழைத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
            அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் யாவரையும் தமதாக்கி அன்பு அன்னையாய் பாசம் பொழிய ஒரு சில பேரால் மட்டுமே முடிகிறது 

.
                உடன் விழாவில் பங்கேற்பதாகக் கடிதம் அனுப்பினேன்.  அங்கிருந்து ஓரிரு நாட்களில் பதில் வந்தது.  பிப்ரவரி 28 அன்று காலையில்
‘போயஸ்
கார்டன் வாருங்கள்’ என்று திருமதி லதா ரஜினிகாந்த் பதில் எழுதியிருந்தார்கள்


அரசாங்கத்திடம் வேலை கேட்டு மனு போடக் கூடிய நிலையில்தான் இன்னும் உள்ளோம். பாடத்திட்டத்தை நிறைய மாற்ற வேண்டியுள்ளது. 
 ஆசிரியர் சார்ந்த பாடத்திட்டம் மாணவர் சார்ந்த பாடத்திட்ட முறையாக மாற வேண்டும்.”  என்றேன் 



.
இவ்வளவு சிந்திக்கும் நீங்கள் ஏன் ஒரு வேறுபட்ட கல்லூரியைத் தொடங்கக் கூடாது?' என்று 23 வயதேயான ஓர் இளைஞனான என்னிடம் திருமதி. லதா ரஜினிகாந்த் கேட்டார். 

 சட்டென்று என்னால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
'உங்கள் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும்' என்று அழகான கையெழுத்தால் திருமதி லதா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்கள் 

.
கேட்கத் தயக்கமாக இருந்தது. 'திரு. ரஜினிகாந்த் அவர்களைப் பார்க்காமலேயே கிளம்புகிறோமோ!' என்று மனம் படபடத்தது. முகக்குறிப்பில் புரிந்து கொண்டராய்’  மாலை நடைபெறும் 'தி-ஆஷ்ரம்' பள்ளி ஆண்டு விழாவில் அவர்தான் நூலை வெளியிடுகிறார். 'அப்போது அறிமுகப்படுத்துகிறேன்'  என்றார்.  சொன்னவாறே செய்தார் 

.
28.02.1998 சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு : தி ஆஷரம் பள்ளி ஆண்டு விழா
                எளிமையைப் பற்றிப் போதிப்பது எளிமையானது, கடைப்பிடிப்பது கடினமானது. எவனொருவன் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்கிறானோ அவனையே வரலாறு வரவு வைத்துக்கொள்கிறது.  மற்றவர்களைப் புறந்தள்ளி விடுகிறது 
 
.
                திரு. ரஜினிகாந்த் அவர்களும், திருதி லதா ரஜினிகாந்த் அவர்களும் பொதுவாழ்வில் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் என்பதை பிப்ரவரி 28 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் எழுதிய 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவே சாட்சி 


.
            பளிச்சென்ற, வெள்ளை வெளேர் உடையில் 'தி ஆஷ்ரம்; பள்ளிக்குழந்தைகள் வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.  அதில் திரு. ரஜினி தம்பதியினரின் இரு மகள்களும் ஓடியாடி வரவேற்றுக் கொண்டிருந்தனர் 


.
            திரு. ரஜினியின் ஞானகுரு பூஜ்யஜீ சுவாமி தயானந்த சரஸ்வதிதான் அந்நூலை வெளியிட வந்தவர்கள்.  மோடி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. பி. கே. மோடி அதன் முதல் பிரதியைப் பெற வந்திருந்தார் 




.
            'ஆஷ்ரம்' பள்ளிக்குழந்தைகளிடம் திடீரென ஒரு பரபரப்பு காரணம்... எல்லோர் இதயங்களையும் அன்பால், உயரிய பண்பால், தன்பால் ஈர்த்த தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் தும்பைப்பூ போன்ற வெள்ளை உடையில் பழைய அம்பாசிடர் காரில் வந்திறங்கினார் 

.
            கூர்மையான கனிவுப் பார்வையால் அனைவரையும் அன்பால் நோக்கியபடி திரு. ரஜினிகாந்த் மின்னலென மேடை ஏறுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதியைக் காலைத் தொட்டு வணங்குகிறார்.  ஆசி பெறுகிறார்.  இரு கைகளைக் கட்டியபடி அமர்ந்தவர்.  ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் ஊன்றி ஆழ்ந்த சிந்தனைக்குள் ஆழ்கிறார்.
            திருமதி. லதா ரஜினிகாந்த் என்னை மேடைக்கு அழைத்துச் செல்கிறார். 

  திரு.  ரஜினிகாந்த் அவர்களிடம் இப்படி அறிமுகப்படுத்துகிறார்.
            “மகாதேவன் பாளை சேவியர் கல்லூரியில் இளம் அறிவியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே எழுத்துத் துறையில் பாரதப் பிரதமரிடம் சத்பவனா தேசிய விருது பெற்றவர்.  எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்றவர்.  பாலம் கலியாணசுந்தரம் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி உள்ளார். என்று திருமதி லதா ரஜினிகாந்த் சொல்லச் சொல்ல ரஜினிகாந்த் என்னைக் கூர்மையாகப் பார்க்கிறார் 

.
     “இவர்தான் சி”கட்டுரைசின்னஞ் சிறு மனிதர்கள்' தொடரை விமர்சனம் செய்து 76 பக்க விமர்சனக் எழுதியவர்.  அவரைப் பெருமைப்படுத்தவே இந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராய் வரவேற்றுள்ளேன். என்று 'திருமதி. லதா ரஜினிகாந்த் சொல்ல, ரஜினி பட்டென்று கையை நீட்டி கைகுலுக்கினார் 


.
            'சீக்கிரமே ஆசிரியராவீங்க...' என்று ஆசி தந்தார்.  மேடையில் நாங்கள் மூவரும் நின்றிருக்க சுவாமி தயானந்த சரஸ்வதி நடப்பவற்றை அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் 


.
            சட்டென்று ரஜினிகாந்த் என் தோள்களைப்பற்றித் தன்னோடு வலப்புறத்தில் நிறுத்திக் கொண்டார்.  அந்தக் கணம் அருமையானது. அன்புமயமானது.
            மாணவனாக இருக்கிறேன்.  படிப்பு முடியவே இன்னும் நான்கு மாதங்களிருக்கிறது. யார் நமக்கு ஆசிரியப் பணி தரப் போகிறார்கள்?  ஏதோதோ நினைவுகள்... ரஜினிக்குப் பக்கத்தில் நிற்கும்போது மனதில் ஊடாடின 


.
                'எல்லோரையும் ஊக்கப்படுத்துபவர் தானே ரஜினிகாந்த். ஊக்கப்படுத்த அவ்வாறு கூறியிருப்பார்' என்று நினைத்தபடி பக்கத்தில் நின்றேன்.
            'உங்களுக்காகப் பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.'  இது நான் 




. 
            'கண்டிப்பாக நான் படிக்கிறேன் மகாதேவன்' என்றார் ரஜினிகாந்த்.
            மேடையில் திருமதி. லதா ரஜினி அவர்களின் நூல் சுவாமிஜியால் வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
            என்னை மேடைக்கு அழைத்த ரஜினி தம்பதியினர்.  வெள்ளி விளக்கை பரிசளித்தனர்.
            அந்த வெளிச்சம்... இன்றுவரை என் வாழ்வில் பரவியுள்ளது.  ஒரு தீபம்தானே ஆயிரம் தீபங்களை ஏற்றி வைக்கும்!





.
அதனால் தானே திரு. ரஜினிகாந்தின் வாக்கிற்கு அவ்வளவு ஈர்ப்பும்
                ரஜினி தீபமல்ல...
                மகா நட்சத்திரம்.


,


No comments: