பக்கத்தில் இருப்பதனால் மட்டுமே பலவற்றை
இரசிக்கத் தவறுகிறோம்.
புரட்டாசி சனிக்கிழமை பொன்மாலைப் பொழுது..குடும்பத்தாருடன்
திருநெல்வேலி அருகிலுள்ள கருங்குளம் கிளம்பினேன்
.திருநெல்வேலி-திருச்செந்தூர்
தேசிய நெடுஞ்சாலைஓரத்தில் அமைந்த அழகு கொஞ்சும்ஊர்.
தூரத்தில் சலசலத்தபடி ஓடும்
வற்றாத ஜீவநதி தாமிரபரணி.
சிற்பங்களின் அழகியல் கூடமாகத் திகழும் கிர்ஷ்ணாபுரம்
கடக்கிறேன்.
மக்கள் நடமாட்டம் குறைகிறது,
இயற்கையின் தூரிகை வண்ணமயமான காட்சிகளை
சாலைமுழுக்கப் பரப்பிவைக்கிறது.
குட்டிகுட்டி குன்றுகள் மனதை மயக்குகின்றன.
இருநூறு
ஆண்டுகள் கடந்த மருதமரங்கள் சாலையின் இருபுறங்களையும் சாமரம்வீசி
தண்மைக்குள்ளாக்குகிறது.
வாழைத்தோட்டம் சில்லென்ற காற்றை அள்ளிவீசுகிறது.நாலுவழிச்
சாலையாய் இன்னும் ஆகாமல் தப்பிய மகிழ்ச்சியில் திருச்செந்தூர் நெடுஞ்சாலை இன்னும்
இருக்கிறது.
நெருங்க நெருங்க மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது.
மலைமேல் அழகான
கோவில்.அந்திசாயும் மாலைவேளை செக்கர்வானமாய் வானம் சிவந்துஇருந்தது.
வகுளகிரித்
தலமாய் திகழும் கருங்குளம் வெங்கடாசலபதி திருக்கோவில் செக்கர்வானத்தின் அழகில்
மிளிர்ந்தது.வானம் எப்போதும் அழகியல் சித்திரம்தான்.
No comments:
Post a Comment