Wednesday, October 16, 2013

பாளையங்கோட்டைதசரா



தசரா வந்துவிட்டால் பாளையங்கோட்டை வேறு முகத்தைத் தன்முகமாய் மாட்டிக்கொள்கிறது.

வனங்களை ரணமாக்கிவிட்டுத் தொட்டிச்செடிகளுக்குள் தொலைந்துபோயிருக்கும் பெருநகரம், பரபரப்பைத் தன்முகமாய் காட்டிகொள்ளும் ஒரு நகரம் உயிர்ப்போடு இருப்பது வாழும் மக்களின் இனிமையான இயக்கத்தால்தான்.
 
வீடுகளில் வைக்கப்படும் கொலுப்படிகள் பெண்களின் உரையாடலையும் தெருவின் உயிர்ப்பையும் இந்த ஒன்பது நாட்களும் காணமுடிகிறது.

புள்ளிகளாலும் வண்ணங்களாலும் கோலங்களாலும் தெருக்கள் அழகியல் பிம்பங்களாய் அமையும் அதிசயம் இந்த நாட்களில்தான்.

 

ஊருமற்றுப் யாருமற்றுத் தனித்துவப் பேருமற்றுக் கண்டம் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இது போன்ற விழாக்கள் மகிழ்வைத்தருகின்றன.

பாளை.ஜவகர் மைதானம் குழந்தைகளின் ராட்டரங்கமாக மாறியதும் பெரியவர்கள் குழந்தைகளாக மாறி மனம்விட்டுச் சிரிப்பதும் இந்த நாட்களில்தான்.


மேற்கத்தியக் கலாசாரத்தால் காலஓட்டத்தில் காணாமல்போனவை கணக்கற்றன.விளைவு வீழ்ச்சிகளின் சாட்சிகளாய் சில தாழ்ச்சிகள்.குடை ராட்டினங்களும் குழந்தைகளின் ரயில்களும் இல்லாவிட்டால் வெறுமையின் கறுமையில் இந்த மனிதர்கள் எந்திரமாகலாம்.
 
பஞ்சுமிட்டாய்க்காரன்,பலூன்வியாபாரி இவர்கள் இன்னமும் உயிர்த்துடிப்போடு வைத்திருக்கிறார்கள் நகரங்களையும் நம்மையும்.


சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி







No comments: