Tuesday, October 15, 2013

பற்றின் பிள்ளைகள்



உதடுகளில் உதிரத்தோடு
உயிர்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்
ஆறுகளை எல்லாம்
சேறுகளாக்கி
தூய்மை பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்
ரசிக்க நேரமற்றுப்
புசிக்க மனமுமற்று
நிம்மதி பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோம்
இப்படி எதையாவது
பற்றிப் பேசமுடிகிறதே தவிர
எதையும் பற்றாமலும்
எதிலும் பற்ற்றில்லாமலும்
இப்போதும்
எப்போதும்
பேசவே முடிவதில்லை.
பற்றிப் பிடிக்கும்
பற்றின் பிள்ளைகள் நாம்.


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி


No comments: