இணையத்தின் இதயத்தில்...
காலம் மாற மாற மக்களிடம் கலையைக் கொண்டுசெல்லும்
ஊடகமும் மாறுகிறது.
நீண்ட நெடுங்கதையைக் காப்பியங்களாகப் படைத்துக் கதைசொன்ன
காப்பியகாலம் இனிய காப்பியங்களைத் தமிழுக்குக் தந்தது.நீதிநூல் காலத்தில்
வெண்பாயாப்பில் வரிசையாய் நீதிஇலக்கியங்கள் தோன்றின.
இந்த நூற்றாண்டின் இனிய ஊடகமாக
இணையஊடகம் வந்தபோது அச்சுநூல்கள் இணையஊடகத்தில்
வெளிவரத்தொடங்கின.
கவிதைகளும்,கட்டுரைகளும் இணையம் மூலம் உலக வாசகர்களைப் பரவலாகச்
சென்றடைந்தன.
மகாகவி பாரதியின் காட்சிகவிதையில் தோற்றம் கண்ட
தமிழ்ப்புதுக்கவிதை ந.பிச்சமூர்த்தி,கு.ப.ரா.,சி.மணி,தருமு
சிவராம்,நகுலன்,ஞானக்கூத்தன்,வல்லிக்கண்ணன் போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்ட
தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் தொடக்கத்தில் கல்வியகங்களில் அனுமதிக்கப்படாத நிலையில்
வானம்பாடி இயக்கம்,எழுத்து இயக்கம்,சரஸ்வதி இயக்கம் என்ற இயக்கங்கள்
தமிழ்இதழ்களின் பெயரில் செயல்பாட்டு இயக்கமாய் தோன்றி புதுக்கவிதைக்குக்
கல்விநிலையங்களில் மதிப்பினைப் பெற்றுத்தந்தன.
இந்த நூற்றாண்டு இணையஊடகத்தின் நூற்றாண்டு.
கல்யாண்ஜி,கலாப்ரியா,என்று
புதுக்கவிதைப் படைப்பாளிகள் யாவரும் இணையதளயங்களில் இயங்குகிறவர்களாக தனக்கெனத்
தனிவலைப்பூக்களை வடிவமைத்து கட்டற்ற அவ்வெளியில் இயங்குகிறவர்களாக உள்ள நிலையில்
எனும் வலைபூக்களை உருவாக்கிப் புதுக்கவிதைகளைத்
தொடரந்து படைத்து வெளியிட்டு வந்தேன்
.முகநூலிலும் தொடந்து எழுதி வருகிறேன்.
ஒருங்குறியில்
உள்ளிட்டதால் கனடா,அமெரிக்கா,இலங்கை,இந்தோனேசியா,ரசியா,அரபுநாடுகள்,தென்ஆப்ரிக்க
நாடுகள் ஆகிய நாடுகளின் வாசகர்களை உடன் சென்றடைந்தது.
பின்னூட்டம் போன்ற வசதிகளால்
உடன் கவிதைகுறித்த வாசகர்களின் கருத்துக்களை அறியமுடிந்தது.
அடுத்தடுத்து நான்
எழுதிய கவிதைகளுக்கு அவை வழிகாட்டியாய் அமைந்தன.
மகாகவி பாரதி பெயரால் நான் தொடங்கிய மகாபாரதி
வலைப்பூ ஆயிரக்கணக்கான உலகவாசகர்களை எனக்குப் பெற்றுத்தந்தது.
நான் உருவாக்கிய கவிதைகள் யாவும் இன்று கூகிள்
தேடுபொறியால் உலக வாசகர்களைச் சென்றடைந்துள்ளன.புதுக்கவிதை இயக்கத்தை இன்று இணையம்
முன்னெடுத்துச் செல்வது தமிழ் என்றும் இளமையான மொழி என்பதைக் காட்டுகிறது.

No comments:
Post a Comment