வண்டிக் கண்ணாடிகளில் குருவிகள்
வேறொரு பறவை இருப்பதாய்
நினைத்துக் கொத்திக் கொண்டிருக்கின்றன.
உள்ளிருக்கும் பழத்துண்டுகளை
எடுப்பதற்காய் கண்ணாடிக்கப்பால்
கைநீட்டிக் கொண்டிருக்கின்றன
குற்றாலத்தில் குரங்குகள்.
ஏடிஎம் கண்ணாடிக் கதவுகளுக்கு
அப்பால் நின்றுகொண்டு
பணம் எடுக்கப்போன அம்மாவை
அழைக்கின்றன அப்பாவிக் குழந்தைகள்.
அப்பால் இருப்பதை
இப்பால் இருப்பதாய் நினைக்கும்
கானல் கண்ணாடிக் குழந்தைகளாய்
கதவுக்கு வெளியே காத்திருந்து
முப்பாலும் சுவைத்து
தப்பாமல் பேசி
பாக்கெட் பால் அருந்தும்
பரிதாபப் பாப்பாக்கள் நாம்.
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி
No comments:
Post a Comment