Wednesday, October 16, 2013

வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை சிறை வைக்கப்பட்ட கல் அறை



பாளையம்கோட்டை அரசு அருங்காட்சியகம் பெரிய வரலாற்றுப் பதிவுகள் உடைய இடமாகத் திகழ்கிறது .

இந்திய சுதந்திரப் போரின் முக்கியமான நிகழ்வான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை 1799ஆம் ஆண்டு மேஜர் பானர்மேன் தலைமையில் நடைபெற்றது .

காலின்ஸ் எனும் அதிகாரி வெள்ளையத்தேவனால் கொல்லப்பட்டார் .

வீரபாண்டிய கட்டபொம்மன் புதுக்கோட்டை செல்ல நேரிடுகிறது  
.
வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை கைது செய்யப்பட்டு பாளையம்கோட்டை அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ள இடத்தில் சிறை வைக்கப்படுகிறார் .

தனிமைச் சிறை வைக்கப்பட்ட அந்தக் கல் அறைக்குள் நுழைகிறேன் .
மனம் கனக்கிறது .

காற்று கூடப் புக முடியா கொடுரமான அறை  

.
நடு நாயகமாக ஓவியர் வள்ளி வரைந்த ஊமைத்துரையின் கம்பீரமான ஓவியம் .

முன்னால் வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாள் ,சுருள் வாள் ,பீரங்கிக் குண்டுகள் .
இரும்புக் கதவு மேலும் இறுக்கமாய் இருந்தது .


அந்த ஒப்பற்ற தியாகிகளுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் .


ஊமையானது பேதை மனம் .


சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 






No comments: