Wednesday, October 16, 2013

உலகப் புகழ்பெற்ற ஆதிச்ச நல்லூர் நாகரிகம்




திருநெல்வேலியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் ஆதிச்ச நல்லூர் .
114 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடுகாடு .
 

தோண்டத் தோண்ட தமிழ் இனத்தின் தொன்மையும் புதைந்து கிடந்த உண்மையும் வெளியே வந்தன .


நான்கு அடிக்கு ஒருவர் வீதமாக இறந்த முதுமக்கள், ஈமத் தாழிகளில் அடக்கம் செய்யப்பட்டனர் .


 பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் மண்ணிலே தன் ஆய்வினைத் தொடங்கினார் .


அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன
அருமையான தொல் பொருட்கள் வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன .

“1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். 


அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.என்று ஆய்வாளர் சுகுமாரன் குறிப்பிடுகிறார் .


நூறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஆய்வு தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பல பதிவுகளைத் தந்தது .


அங்கே கிடைத்த தாழிகளில்  இருந்த மண்பாண்ட எழுத்துக்கள் பிராமி லிபியினால் ஆனவை என்று சமீபகாலமாகக் கண்டறிந்துள்ளார்கள்.


நவதிருப்பதிகளையும் நவ கைலாயங்களையும் பெற்ற தாமிரபரணி நதிக்கரை தொன்மையின் தொட்டிலாகவும் திகழ்கிறது .தாமிரபரணி எனும் தொன்மைத்  தொட்டில்.


 .அருமையான இந்த  நாகரீகத்தை உலகின் பார்வைக்குத் தெளிவாகக் கொண்டு செல்லும் முயற்சியை நாம் உடன் எடுத்தாக வேண்டும்.

ஒரு சில காட்சிமாதிரிகளுடன் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள
ஆதிச்சநல்லூர் அதிசயங்கள் தனிச் சிறப்பு பெற்றஅருங்காட்சியகமாக அந்த மண்ணில் உருவாக்கப் படவேண்டும்.



    முனைவர் ச .மகாதேவன்

No comments: