திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற
ஆசிரியர்களுக்குப் பாராட்டுவிழா 20.10.13 அன்று மாலை 6 மணிக்கு சகுந்தலா
உணவகத்தில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சென்ட்ரல்,தலைவர்
ஏ.வி.எல்.பி.துரைகுமார் வரவேற்றுப்பேசினார்.
விழாவில் சிறப்புவிருந்தினராக பாளை.சதக்கத்துல்லா அப்பா கல்லூரித்
தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன் கலந்து கொண்டு ‘’ஆசிரியம்’’
எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது சிறப்புரையில் ‘’ஆசிரியராகப்
பணியைத் தொடங்கி குடியரசுத்தலைவராய் உயர்ந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்
அவர்களின் பெயரால் அரசு தரும் நல்லாசிரியர் விருது பெற்ற திருநெல்வேலி மாவட்டம்
சார்ந்த 15 ஆசிரயப்பெருமக்களில் பலர் கிராமப்புறம் சார்ந்த அரசுப் பள்ளியில்
பணிபுரியக்கூடியவர்கள் தியாகமனம் படைத்தவர்களாக, ஏழை மாணவர்களை முன்னேற்றக்
கூடியவர்களாகத் திகழ்கின்றனர்.’’ என்று குறிப்பிட்டார்.
திருநெல்வேலி ஆர்யாஸ் ஹோட்டல்களின் பங்குதாரரும் ரோட்டரி துணைகவர்னருமான
ஜெயபிரகாஷ் நாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.
ரோட்டரி சாலைப்பாதுகாப்பு மாவட்டத்
திட்டத்தின் தலைவர் எஸ்.செல்வம்,ஏ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ,,தமிழக
அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 15
நல்லாசிரியர்களுக்கு சிறப்புவிருந்தினர் பேராசிரியர் முனைவர் ச.மகாதேவன், ரோட்டரி
துணைகவர்னர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரியின்
விருதுகளை வழங்கிப் பாராட்டினர்.
செயலர் எம்.ஜெயராமன் நன்றி கூறினார்.
பரிசுபெற்ற
ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர்.
No comments:
Post a Comment