இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலாக
அச்சுப்புத்தகம் வெளியிடப்பட்டது.
புனித சவேரியார்
என்கிற புனிதரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான்
வணக்கம்' எனும் கிருத்துவநூலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் அண்டிறிக்கி
என்பவர். கொல்லத்தில் அந்நூல்
அச்சாக்கப்பட்டு 433
ஆண்டுகளாகின்றன.(20.10.1578)
(தமிழ்நாடன் எழுதிய 'தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம்' நூலிலிருந்து)
(தமிழ்நாடன் எழுதிய 'தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம்' நூலிலிருந்து)
அச்சுக்குப் போன
முதல் மொழி நம் அன்னைத்தமிழ்மொழி. எங்கோ பிறந்து தமிழ் மொழிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் சிலர், தங்கள் நாட்டில் தமிழ் மொழியின் பெருமைகளை
பறைசாற்றிவிட்டு சென்று இருகிறார்கள்.
ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன், வீரமா முனிவர், ): திராவிட
மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்த ராபர்ட் கால்டுவெல்,
. தமிழ் இலக்கியங்கள் மீது தீராத பற்றுக் கொண்டு . சிலப்பதிகாரத்தை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆலன் டேனியலு, –தமிழ் ஆங்கில
அகராதியினைத் தயாரித்து வெளியிட்ட ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ், 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில்
வெளியிட்ட . ஹென்ரிக் ஹென்ரிக்ஸ், திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து
வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என
ஒன்றைத் தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்ட ஜி.யூ.போப், ஜெர்மனி நாட்டைச்
சேர்ந்த மத போதகர். 40,000 சொற்களுடன் மலபார் அகராதி என்ற ஒன்றை வெளியிட்ட பார்த்தலோமியோ சீகன் பால்கு
என்று வரிசைவரிசையாய் தமிழ்பால் அன்பு கொண்டு மேலை நாட்டு அறிஞர்கள்
தமிழ்இலக்கியங்களை உலகின் பார்வைக்குக் கொண்டுசென்ற நிலையில் நாம் என்ன செய்தோம்
என்ற வினாவின் வெளிப்பாடே இந்த இணைய முயற்சி.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்திடும் நோக்கில் தமிழ்இணையத்தளங்களை
உருவாக்கினேன்.
செம்மொழித்தமிழின் சிறப்புகளை உலகின் முன் கொண்டு செல்ல
எனும் தமிழ்இணையத்தளங்களை உருவாக்கினேன்.
தமிழின்
கவிதைக்கென்று ஒரு தமிழ்வலைப்பூ,தமிழ்க்கட்டுரைகளுக்கென்று ஒரு வலைப்பூ என
உருவாக்கினேன்.
தரமான தமிழ்க்கட்டுரைகளை
அவ்வலைப்பூக்களில் வெளிஇட்டேன்.
சூஃபிய சித்தாந்தமும் சித்தர்களும் சித்தர்களும், திருக்குறளில் மருத்துவச் சிந்தனைகள்,
வையகச் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும், உலகக் காப்பியங்களுக்கு நிகரான
தமிழ்க்காப்பியங்கள், உலகத் தரத்திலமையும் தமிழ்ச் சிறுகதைகள், பாரதியின் மரபும் மரபு மாற்றமும், குறுந்தொகையின் வெளிப்பாட்டு உத்திகள், கருணாமணாளனின் சிறுகதைகள் காட்டும்
இஸ்லாமியர்களின் வாழ்வியல்“,தமிழ் இலக்கியம் உணர்த்தும் மண்ணும் மனித உறவுகளும்,
தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும் மனிதநேயச் செய்திகளும் அன்னை தெரசாவின் வாழ்வியலும், ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள், புலரும் புதுயுகத் தமிழ்,
அழகியல் தளத்தில் அமையும் கல்யாண்ஜி கவிதைகள், எதிர்காலத் தமிழ் எவ்வாறு அமையும், வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி
சிந்தனைகள், சமூக மாற்றத்தில் தமிழ் இதழ்களின் சீரிய பங்களிப்பு – வரலாற்றுப் பார்வை, சங்க இலக்கியமரபில் கவிஞர் இளையபாரதியின் பட்டினப்பாலை, செம்புலப்பெயல் நீர் கவிதைகள் ஓர் ஆய்வு, சி. பா. ஆதித்தனாரின் இதழியல் சாதனைகள், மூவர் தேவாரத்தில்
இயற்கை, குறுந்தொகை காட்டும் மனித உறவுகள், நபிகள் நாயகம் (ஸல்) அன்பின் தாயகம்.
கலித் தொகையில் உளவியல் கூறுகள்
எனும் தலைப்புகளில் நான் தமிழ்இணையத்தளங்களில்
எழுதிய கட்டுரைகள் உலகநாடுகளின் தமிழ்அறிஞர்களின் பார்வைக்குள்ளானது.
எனும் வலைப்பூவில் நான் மகாகவி பாரதியையும் தாகூரையும் ஒப்பிட்டு எழுதிய ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள் எனும் கட்டுரையைக்
கனடாவிலிருந்து வெளியாகும்
செம்மொழித்தமிழ் டாட் காம் எனும் என்
இலக்கியஇணையத்தளத்தில் இதுவரை 5000 உலகத்தமிழர்கள் பார்வையிட்டுள்ளனர்.
தேமதுரத்தமிழோசை
உலமெலாம் பரவ இந்தஇணைய முயற்சிகளும் துணைபுரியட்டும்.
முனைவர் ச.மகாதேவன்
1 comment:
ஐயா,
//அச்சுக்குப் போன முதல் மொழி நம் அன்னைத்தமிழ்மொழி. எங்கோ பிறந்து தமிழ் மொழிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள் சிலர், தங்கள் நாட்டில் தமிழ் மொழியின் பெருமைகளை பறைசாற்றிவிட்டு சென்று இருகிறார்கள்.//
என்றெழுதியுள்ளீர்கள்.
இதில், ’எங்கோ பிறந்து தமிழ் மொழிக்கும் தனக்கும்’ என்னுமிடத்தில் ‘தமிழ்மொழி’ என்றில்லாமல் ‘தமிழ் மொழி’ என்றிருப்பது சரியா?
‘தமிழ்மொழிக்கும் தனக்கும்’ என்றிருக்கவேண்டாமா?
‘எங்கோ பிறந்து’ என்பதை ‘எங்கோபிறந்து’ என சேர்த்தெழுதியிருந்தால் அதுதரும் பொருள் பொருத்தமாயிருக்கும். அன்றோ? ‘பிறந்து’ என்பதைக்காட்டிலும் அவர் பிறந்தது எங்கோவென்பதுதானே இங்கே சிறப்பித்துச்சொல்லவேண்டிய செய்தி?
‘எங்கோபிறந்து’ என்பதும் ‘எங்கோ பிறந்து’ என்பதும் ஒரேபொருளையாதரும்?
‘சம்பந்தமே இல்லாதவர்கள் சிலர்’ என்பதை
‘சம்பந்தமேயில்லாதவர்கள்சிலர்’ என்றெழுதியிருந்தால்
சொல்லவந்த பொருளை சரியாய்ச்சொன்னதாயிருக்கும்.
‘சம்பந்தமே இல்லாதவர்கள் சிலர்’ என்பதைப்பாருங்கள், ‘இல்லாதவர்கள் சிலர்’ என்பது ஒரு பொருளை தரக்கூடியதாயிருப்பதை அறியலாம். இங்கே சொல்லவரும் பொருளானது சிலராபலராவென்பதன்று.
”பறைசாற்றிவிட்டு சென்று இருகிறார்கள்”
இதை, ’பறைசாற்றிவிட்டுச்சென்றிருக்கிறார்கள்’ என்றெழுதினாலென்ன? இப்படியெழுதினால் அதை இதுபோலவே ஒரேதொடராக படிக்கலாம். ஆனால், ’பறைசாற்றிவிட்டு சென்று இருகிறார்கள்’ என்றெழுதியதை அப்படி ஒரேதொடராய்ப்படிக்கமுடியுமா?
‘இருக்கிறார்கள்’ என்பதை தனித்துப்படித்தால் அது தனக்குரியபொருளை தனியாகவெளிப்படுத்துவதாயிருக்காதா? இருக்கிறார்களென்பதை எதற்காக தனித்துச்சொல்லவேண்டும்?
‘பறிசாற்றிவிட்டு சென்றிருக்கிறார்கள்’ என்றெழுதினாலும் அவர்கள் சென்றதைக்குறித்துச்சொன்னதாகிவிடுமே?
‘பறைசாற்றிவிட்டுச்சென்றிருக்கிறார்கள்’ என்பதுதானே படிப்பதற்கும் பொருள்கொள்வதற்கும் சரியாயிருக்கும்?
Post a Comment