முனைவர்
ச.மகாதேவன்,
திருநெல்வேலி
தமிழின் அடையாளமாகத் தமிழரின் அடையாளமாகத் திகழும் ஒப்பற்ற காப்பியம் .
தமிழின் அடையாளமாகத் தமிழரின் அடையாளமாகத் திகழும் ஒப்பற்ற காப்பியம் .
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனும் காப்பியம்.சேர சோழ பாண்டிய நாடுகளில் உலா வந்த ஒற்றுமைக் காப்பியம் சிலப்பதிகாரத்தைக்
கல்லூரிகளிலும் கல்விசார் புலங்களிலும் ஏன் அதிகமாய் முன்னிறுத்தாமல் இருக்கிறோம்
? என்ற வினா நெஞ்சைக் கிள்ளத்தான் செய்கிறது
அரசனையும் தெய்வத்தையும் பாடும் மரபிலிருந்து மிகச் சாதரணமான குடிமகன் கோவலனையும் கண்ணகியயும் பாட்டுடைத் தலைவர்களாக்கி இளங்கோ முதல் புரட்சியைத் தொடங்கினார் .தன் சகோதரன் மன்னனாக இருக்கும்போது
,அரச குலத்திலிருந்தே அப் புரட்சி தொடங்கப்பட்டது வியப்பிற்குரியது .
வணக்கத்திலே தொடக்கி சுபம் என்று முடித்த இன்பியல் முடிவுகளுக்கு அப்பால் பெண்ணாசையால் யாவற்றையும் இழந்து புது வாழ்வு தேடி நாட்டை விட்டு ஓடிய அத் தம்பதியரை விதி எவ்வாறு துரத்தி அழித்தது என்ற செய்தியை யதார்த்தமாய் தந்து துன்பியல்
சித்திரத்தை அவலச் சுவையோடு தந்தார் என்ற காரணத்திற்காக இளங்கோவடிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது
சித்திரத்தை அவலச் சுவையோடு தந்தார் என்ற காரணத்திற்காக இளங்கோவடிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது
.
ஒழுக்கநெறி சார்ந்த உயரிய மதிப்பீடுகளோடு எளிய கதை மாந்தர்களாய் மாசாத்துவனையும்
மாநாய்கனையும் படைத்து காப்பிய நெருக்கத்தில் எளிய மனிதர்களின் நேசத்தைக் கொண்டு வந்த காப்பியம் சிலப்பதிகாரம் என்பதால் சிலம்பு நமக்கு நெருக்கத்தில் இருக்கிறது
மாநாய்கனையும் படைத்து காப்பிய நெருக்கத்தில் எளிய மனிதர்களின் நேசத்தைக் கொண்டு வந்த காப்பியம் சிலப்பதிகாரம் என்பதால் சிலம்பு நமக்கு நெருக்கத்தில் இருக்கிறது
தழுவலும் மொழிபெயர்ப்பும் இல்லாத உண்மைக் கதை ,நம் தமிழ் மண்ணில் நடந்த கதை
.
தமிழரின் மண் சார்ந்த குன்றக் குரவையும் ,ஆய்ச்சியர் குரவையும் ,வென்றிக் கூத்தும் வள்ளிக் கூத்தும் பதிவு செய்த ஒப்பற்ற காப்பியம் சிலப்பதிகாரம் .
சிலம்பு, நாம் இழந்த கலைகளைக் காட்டும் கலை ஆவணம் .
சிலம்பு,தமிழகக் கலைகளின் தொட்டிலாகத் திகழ்கிறது .
இயற்கையைத் தெய்வமாகப் போற்றிய உயரிய சமூகத்தின் வரலாற்று ஆவணமாகச்
சிலம்பு அமைகிறது .
'' திங்களைப் போற்றுதும் ,திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்,
மா மழை போற்றுதும், மா மழை போற்றுதும்,
பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்,"
என்று இயற்கையைத் தெய்வமாகப் போற்றிய இளங்கோ சுற்றுச் சூழல் பிதாமகனாகத்
திகழ்கிறார் .

அரசியல் அறமும் ,தனிமனித ஒழுக்கமும் நிரம்பிய லட்சிய சமுதாயத்தின் வரலாற்றுச் சான்று சிலம்பு .''தேரா மன்னா ''என்று அரசனைப் பார்த்து அண்டை நாட்டில் இருந்து பாண்டிய நாடு வந்த பாதிக்கப்பட்ட பெண் நியாயம் கேட்டுப் போராட முடிந்த சமுதாயத்தின் கதையைச் சிலம்பு இலக்கிய ஆவணமாக ஆக்கியது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அசாதாரண
நிகழ்வு .
நிகழ்வு .
தவறு செய்ததைக்
கண்ணகி நிரூபித்த உடன்
"பொன்செய் கொல்லன் -தன் சொல் கேட்ட
யானோ அரசன் ?யானே கள்வன்
மண்பதை காக்கும் தென்புலக் காவல்
என் முதற் பிழைத்தது ;கெடுகஎன் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே "
என்று தன் உயிரைத் தந்தேனும் நீதியை நிலை நாட்டிய உயரிய பாண்டிய மன்னனை இளங்கோ கட்டுகிறார் .

சிலம்பு தமிழ்
மண்ணின் தமிழ் அடையாளம்

1 comment:
//இயற்கையைத் தெய்வமாகப் போற்றிய இளங்கோ சுற்றுச் சூழல் பிதாமகனாகத் திகழ்கிறார் .//
அய்யா நாம் இழந்த தமிழ் நூல்கள்தான் எத்துனை எத்துனை...
எவ்வளவு பெரிய இழப்பு...
நமது அறிவியல் சிந்தனைகள், கணித சிந்தனைகள் எல்லாம் காலவெள்ளத்தில் காணாமல் போனது எவ்வளவு வருத்தத்திற்கு உரிய விசயம்.
Post a Comment